கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir