சண் மச் நிறுவனத்தின் மிக நம்பகரமான உற்பத்தி

தரை மேற்பரப்பின் தூய்மையைப் பேணுவதற்குசண் தரைக் கிருமி நீக்கித் திரவத் தெளிப்பான்!

சண் மச் நிறுவனத்தின் மிக நம்பகரமான உற்பத்திஇரு ரக நறுமணங்களுடன் இப்போது சந்தையில்

இலங்கையில் மிகப் பிரபலமான ‘’சூர்யா’’ என்கிற வர்த்தக நாமத்தின் கீழ் வீட்டுப் பாவனைப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ‘சண் மச் கொம்பனி (தனியார்) வரைவுள்ளது நிறுவனம், ‘’சண்’’ என்கிற வர்த்தக நாமத்தின் கீழ் புத்தம் புதிய பொருள்களை அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய சூரி ராஜன் மற்றும் பணிப்பாளர் கௌரி ராஜன் அவர்களினால்இவை அறிமுகப்படுத்தப்பட்டன.

மக்களின் நம்பிக்கையை வென்று புதிது புதிதாகப் பொருள்களை உருவாக்கும் இந்த நிறுவனம் தற்போது நோய்க் கிருமிகளை இல்லாதொழிக்கும் பாதுகாப்புப் பொருளை புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பொருளின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து நிறுவனத்தின் பணிபாளர் கௌரி ராஜன் அவர்கள் கிருமி நீக்கித் திரவத்தின் அறிமுக நிகழ்வில் விளக்கினார். ‘’உலகில் பெரும் கொள்ளை நோயாகப் பரவி வரும் கொரோனா குறைவதற்கான சாத்தியக்கூறுகளைக் காணமுடியவில்லை. இதிலிருந்து பாதுகாப்புத் தேட கைகளை மீண்டும் மீண்டும் கழுவுங்கள், உடமைகளைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருங்கள் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது. சந்தையில் குவிந்துகிடக்கும் பல்வேறு வகையான பொருள்களுக்கு மத்தியிலிருந்து எமது உயிரை, வாழ்வைப் பாதுகாப்பதற்கான தரமான பொருள்களைத் தெரிந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமது முன் உள்ளது. அதனால்தான் மக்களின் நம்பிக்கையை வென்ற நிறுவனமான சண் மச் ”ஆரோக்கியமான வாழ்வு. ஆரோக்கியமான தேசம்” என்கிற எமது தொலைநோக்கோடு சமரசங்களுக்கு அப்பாற்பட்ட தரத்தை உறுதிப்படுத்தியபடி சண் தரைக் கிருமி நீக்கித் திரவத் தெளிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளோம். லெமன் மற்றும் ஐஸ் பைன் நறுமணங்களுடன் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இவை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’’ – எனத் தெரிவித்தார்.

இந்த தயாரிப்பு உணவு தர உற்பத்தியாக்கமாகச் சான்றளிக்கப்பட்டது, ‘சன்’ வர்த்தக நாமம், தரை மேற்பரப்பில் தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே 99.9 சதவீதமான கிருமிகளையும் மொத்தமாக நிர்மூலமாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கிருமிகளுக்கு எதிரான அகல் நிரல் உயிரியல் செயல்பாடு எனப்படும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் ஊடாகச் இந்தச் செயற்பாடு இடம்பெறுகின்றது.

புதுமைகளுக்கு முன்னிடம் அளிப்பதால், சந்தையில் குவிந்து கிடக்கும் சாதாரணமாக கிருமி கொல்லிகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் லெமன் மற்றும் ஐஸ் பைன் நறுமணம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் கிளர்ச்சியுறச் செய்வதுடன் புத்துணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

கொள்ளை நோய்ப் பெருந்தொற்றுக் காரணமாக சுகாதாரத்துறையினர் சுகாதாரம் மற்றும் சுத்தம் என்பவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில் தரமான, நம்பகமான ஒரு தயாரிப்பை எல்லோருமே தேடுகின்றார்கள். தங்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரே பொருளாக இருப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள். அந்தத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இத்தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பெருந் தொற்றுக் காலத்தில் தரை மேற்பரப்பின் தூய்மையைப் பேணுவது மிக முக்கியமான கடமை என்கிற பழக்கத்தை இலங்கையின் நுகர்வோரிடம் அழுத்திப் படியவைத்து சுகாதாரம் தொடர்பில் அவசியமான ஒழுக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள திரவ கிருமி நீக்கித் தெளிபான் தயாரிப்பு ஊடாக சண் மச் நிறுவனம் முயற்சி செய்கின்றது.

விரைவிலேயே தனது திறமைவாய்ந்த விநியோகஸ்தர்கள் மூலம் சந்தையில் எல்லா இடங்களிலும் இந்தத் தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்த முடியும் என்று சண் மச் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

நிறுவனத்தின் பல சிறந்த தயாரிப்புகளில் இந்தத் தயாரிப்பு முதன்மையானது என்றாலும், சன் தயாரிப்பு வரம்பில் கை கழுவி திரவம் மற்றும் மூலிகை கொசு விரட்டும் லோஷன் ஆகியவையும் அடங்கும். இந்த இரண்டு தயாரிப்புகளும் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்ற மூலப் பொருள்கள் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

சண் மச் நிறுவனம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னதாக ரி.ஆர்.ஆர்.ராஜனால் உருவாக்கப்பட்டது. அப்போது உருவான அந்த வர்த்தக நாமம் இலங்கை முழுவதும் தாக்கத்தைச் செலுத்தியது. மெழுகு பூசப்பட்ட மிகவும் பாதுகாப்பான நெருப்புக் குச்சிகளைத் தயாரிக்கும் முதல் நிறுவனமாக அது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருக்கின்றது. இருள் சூழ்ந்த நேரங்களில் எல்லாம் இலங்கையினரது ஒவ்வொரு வீட்டிலும் ஒளி ஏற்றப்படுவதை அது உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஆபிரிக்க நாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியதன் மூலம் சர்வதேச சந்தையிலும் இந்த நிறுவனம் கால் பதித்தது.

சூர்யாவின் தயாரிப்பு வரம்பில் 14 வெவ்வேறு வகைகள் வரையிலான ஊதுபத்திகள், சூர்யா மெழுகுவர்த்திகள் மற்றும் சன் டூத்பிக்ஸ் மிக முக்கியமானவை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் தரம், பாதுகாப்பு ஆகியவற்றில் உயர்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன மற்றும் நுகர்வோருக்கு மிக நெருக்கமானவை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir