இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(25) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காத்தான்குடி காவற்துறை பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கமாக சென்ற மோட்டார் சைக்கிளும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு திசைய நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு மோட்டார் சைக்கிளகளிலும் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் காத்தான்குடி காவற்துறை மேலதிக விசாரகைளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir