தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 152 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,076 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 156 வானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir