நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மூடப்பட்டது

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதி முற்றாக கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளது. மீண்டும் 28ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir