கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு இன்று

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூவரின் இறுதிச் சடங்கு இன்று இடம் பெறவுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் 17வது நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றைய தினம் ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir