சுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா

கொழுப்பில் இரு பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பை சேர்ந்த இரு பொதுசுகாதார பரிசோதகர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த இருவரும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர் அவர்களிடம் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஜிந்துபிட்டியவிலுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir