நாட்டில் தேசிய பேரழிவு ஏற்படும் அபாயம்

நாட்டில் தேசிய பேரழிவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தேவையான தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைக்கவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir