ஊடகவியலாளர்கள் 05 பேருக்கு கொரோனா!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சிங்கள பத்திரிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும், ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும், ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலளரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை பாராளுன்றில் நேற்று சுகாதார கட்டளைச் சட்டங்கள் மீதான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தின்போது, பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் எவரும், பாராளுமன்ற வளாகத்திற்குள் வைத்து கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir