மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா

அண்மையில் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

27 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இடம்பெற்ற அவரது மரணச் சடங்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir