9ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா?

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 9ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரவியுள்ள வைரஸானது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால்கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir