கொரோனா வைரஸ் ; 215 பேர் குணமடைவு 547 பேர் சிகிச்சையில்

இலங்கையில் இதுவரை 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 215 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 547 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 133 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 52 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 91 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலையில் 135 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 153 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir