சஜித் அணியிலுள்ள ஐவர் மீது விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி ஹரின் பெர்னாண்டோ, சுஜித் பெரேரா, மயந்த திஸாநாயக்க, நளின் பண்டார மற்றும் ஜே.சி.அலவத்துவல ஆகியோர் இன்று திங்கட்கிழமை ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எம்.பிக்கள் 5 பேரும் அண்மையில் இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழு சென்று, மேற்படி ஆணைக்குழுவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

இந்த முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஊடங்களுக்கு அரசியல் பழிவாங்கல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து விமர்சனம் வெளியிட்டனர்.

இது சம்பந்தமாக வாக்குமூலம் பதிவு செய்யவே மேற்படி ஐவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir