கொரோனா ஊரடங்கை மீறிய 3 ஆயிரம் பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2,923  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 438  வாகனங்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர். தெரிவித்துள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir