தலைமறைவாகிய நபர்: கைது செய்ய 10 குழுக்கள் நியமனம்

இரத்தினபுரி – குருவிட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கைத்துப்பாக்கியுடன் தலைமறைவாகிய காவல் துறை உத்தியோகத்தரை கைது செய்வதற்கு 10 காவல் துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி சிரிபாகம பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் குறித்த காவல் துறை உத்தியோகத்தர் தலைமறைவாகியிருந்தார்.

இவ்வாறு தலைமறைவாகிய குறித்த காவல் துறை உத்தியோகத்தர் குருநாகல் பகுதியில் அமைந்துள்ள அவரின் உறவினர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்றுள்ளதோடு, தன்வசம் காணப்பட்ட கைத்துப்பாக்கியை காண்பித்து 9 பேரை கொலை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யவுள்ளதாக தெரிவித்த 9 பேரில் குருவிட்ட காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உள்ளடங்குவதாக அவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காவல் துறை உத்தியோகத்தர் கைத்துப்பாக்கியுடன் தலைமறைவாகி 12 தினங்கள் கடந்துள்ள போதிலும் அவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir