விசேட நோயாளர் காவுவண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது – அஜித்

கொழும்பிற்குள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் மரக்கறி சந்தையை மீண்டும் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir