திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளைப் பேணி வந்த மூன்று வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்தியரை IDH மருத்துவமனைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir