உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் – அமெரிக்காவிலிருந்து உடல் வருகிறது

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று -11- காலமானார்.
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர்.

பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

அமெரிக்காவிலிருந்து பூதவுடல் சொந்த வீட்டிற்கு வந்த பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலம் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உறவினர்கள் கலந்து கொள்ளவார்கள் எனக் கூறப்படுகிறது.

துக்க காலத்தில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir