சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 41 வயதுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

வயலில் வரம்பு வெட்டிக் கொண்டிருந்த வேளை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir