தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் நேற்றுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9,520 என மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அளவில் 9,316 குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலருணவு நிவாரணங்களை வழங்கியதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதற்கப்பால், நான்கரை இலட்சத்திற்கு மேலானவர்கள் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவிற்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக திறைசேரி 2, 407 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir