இலங்கையில் திடீரென திடீரென வீதிகளில் இறந்துவிழும் மனிதர்கள்!

இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது.

இந்த உயிரிழப்புக்கள் கொரோனா வைரஸினால்தான் ஏற்படுவதாக சிலர் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக பாணந்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுசம்பந்தமாக கூறிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார , இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரை இது கொரோனா வைரஸ் மரணங்கள் எனக் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir