மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நாளை முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற நிலைமையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் அதிக பயணிகளுடன் பேருந்துகள் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதனை கண்காணிப்பதற்காக குழுக்களை நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுடன், பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஏற்ப பேருந்துகள் பயணிக்கின்றதா என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளனர் எனவும் .அவர் மேலும் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir