பளை பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் ஆணொருவர் இனந் தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செம்பியன்பற்று வடக்கு மாமமுனைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir