இன்று 88 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா பரவல் காரணமாக இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 88 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இலங்கையர்கள் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 12.40 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்துடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir