மேல் மாகாணத்தில் இன்று வழமைக்கு திரும்பிய போக்குவரத்து

மேல் மாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் இன்று(17) வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.

பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து நேற்று (16)போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்ற போதிலும் பேருந்து, ரயில் என்பனவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது.

மேல் மாகாணங்களுக்கான தடை நீக்கப்பட்டாலும் மேல் மாகாணத்தில் 24 காவல்துறை பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 17காவல்துறை பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் ஏழு காவல்துறை பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir