பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று விசேட பேச்சு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு விசேட செயலணிக்குழுவின் சிசுபாரிகளின் அடிப்படையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

You May Also Like

About the Author: kalaikkathir