கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காகச் சிறப்பு உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி சேவைகளிலும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கங்களிலும் இந்த உரையானது நேரடியாக ஒளிபரப்படும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் கோதபய ராஜபக்ஷ 69 இலட் சத்து 24ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் வைத்து கோத்தாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir