புதிய பொருளாதார கொள்கை :வெளியிட்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜனவரியில், அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

அவர் நேற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்யா நாதெல்லா உள்ளிட்ட முக்கிய தொழில் பிரமுகர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடினார்.

அப்போது, புதிய அரசின் பொருளாதார கொள்கை குறித்து, அவர் பேசியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட கொரோனா நிவாராண சட்டம் போல, மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் இயற்றப்படும்.

இதை, பார்லி., உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

You May Also Like

About the Author: kalaikkathir