அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பைடன் அமைத்துள்ள ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள விவேக் மூர்த்தி, சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராகவும், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.
பைடனின் நெருங்கிய நட்பில் உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முக்கிய ஆலோசகளை வழங்கியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகித்துள்ளார்.