மேலும் 93 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 93 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து நால்வரும், அபுதாபியிலிருந்து ஐவரும், கட்டார் – தோஹாவிலிருந்து 39 பேரும், மஸ்கட் – ஓமானிலிருந்து 30 பேரும், பாகிஸ்தான் – கராச்சியிலிருந்து 13 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டும் உள்ளனர்.

அதேநேரம் பல்வேறு நாடுகளில் தொழில்வாய்ப்புக்காக 180 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir