எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

பாம்பு தீண்டிய நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir