மேலும் 411 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 411 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.

கட்டாரில் இருந்து 290 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த 21 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் வருகைத் தந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு, தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir