
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினார்.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட காலம் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் காலமானாதாக அவர் தெரிவித்தார்.
ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மிக தீவிரமாக ஆதரித்த அவர், அதற்காக தனது இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தினாலும் மதிக்கப்படும் ஒருவராக விளங்கிய ஆயரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பே