‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்”!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தினை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் வர்ணித்துள்ளார்.

இந்திய கடற்படையுடனான கூட்டு கடற்படை பயிற்சி மற்றும் துறைமுக விஜயத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரையோரங்களுக்கு அருகில் இக்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

இத்தாக்குதலை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என வர்ணித்துள்ளதுடன், “கடற்படையினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா திட்டமிட்டே தடுத்தது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 104 கடற்படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 84 பேரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈரானுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply