ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் திட்டமிட்ட தாக்குதலை நடத்தவில்லை, என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கைப்பற்றிய பகுதிகளைக் காப்பாற்றவே தாம் எதிர்த் தாக்குதல் நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யாவின் இலக்குகளைத் தாக்க உக்ரைனுக்கு எந்தத் திட்டமும் இல்லை, என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.
இதன்போது, இம்மாதத் தொடக்கத்தில் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா விமானம் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்த விடயம் தொடர்பிலும் அவர் விளக்கமளித்திருந்தார்.
இதனிடையே உக்ரைனுக்கு தமது ஆதரவினை வழங்குவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
T01