பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்று விதித்துள்ள தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோவிற்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்தே அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரேசிலில் 1990 முதல் 1992 வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார் என்பதோடு,  ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க முயன்றதால் இவரது செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன் ஒரு கட்டுமான நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்வதற்கு ரூ.32 கோடி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். அதனையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அவ்வாறான நிலையிலேயே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் அந்த நாட்டின் உயர் நீதிமன்றில்  நடைபெற்று வந்தது.

விசாரணையில், பணமோசடி நடந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோவிற்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply