பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அரசு அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானிய தனியார் நிறுவனங்களுக்கும், அண்டை நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவதற்கும், ஏற்றுமதி செய்யவதற்கும் பாகிஸ்தான் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.