தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு தொகுதி பெண் அமைப்பாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பெலிஸாரால் கைது செய்துப்பட்டள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஜே.அருள்மதி என அழைக்கப்படும் சற்குணாதேவி என்பவரே பெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பெண் அமைப்பாளரின் வீட்டை மருதங்கேணி பொலிஸார் சுற்றிவளைத்தே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய இரண்டு நபர்கள், விரைவில் கைது செய்து விடுவோம் என பெண் அமைப்பாளரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்தே நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், வடக்கு மாகாணத்தில் பலவந்தமான காணி அபகரிப்புக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் வடமராட்சி மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி ஒருவர் முயற்சித்திருந்தார் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு பொலிஸாருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.