வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன, தெரிவித்தார்.
டுபாயில் இருந்து வந்த குறித்த இருவருக்கும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடத்தப்பட்ட சோதனையின் போது, வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவரும் வெளிநாட்டில் இருந்தபோது வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம், டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், 2022 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இலங்கையில் முதல் இரண்டு பேருக்கு குரங்கு காய்ச்சல் நோய் உறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
குரங்கு காய்ச்சல் நோய் நிலைமை, ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று, பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இது காணப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் பல பகுதிகளில் இந்த தொற்று வேகமாக பரவியது.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர்க் கணுக்கள் ஆகியவை குரங்குக் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். இவை இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.
முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கண்கள், வாய், தொண்டை, இடுப்பு மற்றும் உடலின் பிறப்புறுப்பு அல்லது குத பகுதிகளில் தடிப்புகள் காணப்படும்.
அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் பொதுவாக வலி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் உபயோப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடனான நெருங்கிய தொடர்பின் மூலமும், பாலியல் தொடர்புகளாலும் குரங்குக் காய்ச்சல் நோய் பரவுவதாக, ஜக்கிய நாடுகள் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.