முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, அவ்வாறானதொன்று இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், எவருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சருக்கு அதிகாரம் இல்லை, உத்தியோகபூர்வ இல்லங்கள் பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்படுவது எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.