பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இருப்பினும் அவருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் பிணைவழங்கப்பட்டது.

இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் 14 நாள்களுக்கு இம்ரான் கானுக்கு பிணை வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply