நாட்டில் வர்த்தகங்கள் சீர்குலைந்து, மருந்து கூட இல்லாத பின்னணியிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் தற்போது தவறான பொருளாதார கொள்கைகளை கையாண்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கல்லயில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டை கட்டியெழுப்பு கூடிய அரசியல் கட்சி அல்ல.
தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பொது மக்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற வாய்ப்பிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.