குருந்தூர் மலையில் ஆலயங்கள் இல்லை – முற்றுமுழுதாக நிராகரித்த தேரர்!

முல்லைத்தீவு குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதி 100 வீதம் பௌத்த விகாரை என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் குருந்தி விகாரை ஒரு கோவில் இல்லை.

மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பௌத்த வழிபாட்டிடம்.

சிலர், பொய்யான கூற்றுகளுக்கு ஆட்பட்டு அந்தப் பகுதி மக்களிடையே நிலத்தை பகிர்ந்தளிக்க முயல்வது தவறு.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, இது தொடர்பில் அனைவருக்கும் நியாயமான உடன்பாட்டை எட்ட வேண்டும்” என  பிக்கு வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply