ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் ஊடாக அடக்கு முறையை கையாள முற்படும் அரசாங்கம்!

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அரசாங்கத்திடம் சென்றால் அரசாங்கத்தை விமர்சிக்கம் ஊடகங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது ஊடக நிறுவனங்களிடம் தான் காணப்பட வேண்டுமே தவிர, அரசாங்கத்திடம் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றம் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டமொன்று அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான சட்டங்கள் நாட்டுக்கு அவசியம் என்றாலும், இதன் அதிகாரங்கள் ஊடக நிறுவனங்களிடம் தான் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன் தான் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். இது சுய ஒழுங்குபடுத்தல் செயற்பாடாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சென்றால், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துவிடும் என்பதோடு, ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு சுய ஒழுங்குறுத்தல் ஒன்றை கொண்டுவருவது தான் சிறப்பாக அமையும்.

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஊடாக, அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொள்ள முற்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி ஒரு நவீன ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply