ரணில் மீது சினைப்பர் தாக்குதல் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் போது சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அதன் காரணமாக ஜனாதிபதி நாடு திரும்பும் போது அவருக்கு உயர் அடுக்குப் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி நாடு திரும்பும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல், சினைப்பர் தாக்குதல், பொது மக்களால் குழப்ப நிலைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட 6 விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களுக்கு விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 8 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply