மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இலங்கையில் உருவாகிறது புதிய அரசாங்கம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இது வரைக்கும் ஞாயிறு தினமன்று நாடாளுமன்றம் கூடியதில்லை எனவும்,  ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை, பங்குச்சந்தைக்கும் பூட்டு எனத் தெரிவித்திருந்த ஜி.எல்.பீரிஸ், நாடே முடங்கும் நிலை ஏற்படவுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு அல்ல, இது இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது என்று சுட்டிக்காட்டிய பீரிஸ், தனது அரசாங்கத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் பாதகமான முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply