அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கனகசபை தேவதாசனை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் முருகையா கோமகன் இன்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் முருகையா கோமகன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடு வரவேற்கத் தக்கதாகும் என்று குறிப்பிட்டார்.

மேலும், எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள தேவதாசனுக்கு மேற்கொள்ளவேண்டிய வைத்திய சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply