இலங்கையின் கடன் பொறி, இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது எனவும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களை வழங்கி, இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.
இந்தியா அந்த ஆதரவை வழங்கவில்லை என்றால், இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு சென்றிருக்கும் என்றும் இதில் எந்த கேள்வியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த மாதம் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் குறித்து அவர் சூசகமாக குறிப்பிட்டபோதும், விபரங்களை வெளியிடவில்லை.