இலங்கையின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறையாக உள்ளனர் – சாடும் பேராயர்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

1,000 க்கும் அதிகமான இந்த கொள்கலன்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் இவை அதிக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கர்த்தினால் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவை மூடிமறைக்க யாரோ ஒருவர் 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகவும், அது குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே இது தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு நினைவூட்டுவது தமது கடமை, என்றும் கர்த்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள், நாட்டை முன்னேற்றுவதில் அக்கறை காட்டவில்லை.

உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட மற்ற நாடுகளில் இருந்து அனைத்தும் இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டில் உற்பத்தி நடைபெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply