இலங்கையில், எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ நெல்லை 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஒரு கிலோ நாடு மற்றும் சிவப்பு அரிசி நெல் 95 ரூபாய்க்கும் சம்பா 100 ரூபாய்க்கும் கீரி சம்பா நெல்லை 110 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய விலை நிர்ணயம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு பரிந்துரைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.